ஹமில்டனில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்
கனடாவின் ஹமில்டன் நகரில் இன்று காலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
பார்டன் தெரு ஈஸ்ட் மற்றும் பிரேசர் அவென்யூ பகுதியில் உள்ள பஸ் காத்திருப்பு நிலையம் அருகே அதிகாலை 1.50 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அங்கு ஒருவர் உயிருக்கு ஆபத்தில்லாத வகையில் காயமடைந்த நிலையில் காணப்பட்டார் எனவும், அவருக்கு உடனடி மருத்துவ உதவி வழங்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகத்திற்கிடமான ஒரு வாகனம், பிரேசர் அவென்யூ வழியாக தெற்குப்பக்கம் அதிக வேகத்தில் தப்பியோடியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான தகவல்கள் அல்லது கேமரா, சிசிடிவி, டாஷ் கேம் பதிவுகள் உள்ளவர்களிடம், ஹாமில்டன் பொலிஸாரை தொடர்புகொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.