பிரான்ஸில் அழுகிய நிலையில் 10 வயது சிறுமியின் சடலம் மீட்பு
பிரான்ஸில் வீடொன்றில் இருந்து 10 வயது சிறுமியின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை Soissons (laisne) நகரில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இந்த சடலம் நேற்றையதினம் மீட்கப்பட்டுள்ளது.
வெளியே பூட்டப்பட்ட அறை ஒன்றுக்குள் இருந்து 10 வயதுடைய சிறுமி ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
துர்நாற்றம் வீசிய நிலையில் சிறுமியின் சடலம் இருந்ததாகவும், SAMU மருத்துவக்குழுவினர் அழைக்கப்பட்டு, சிறுமியின் சடலம் மீட்கப்பட்டது எனவும், அச்சிறுமி இறந்து நான்கு அல்லது ஐந்து நாட்கள் ஆகியிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த சிறுமியின் தாய் தற்கொலைக்கு முயன்ற நிலையில், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சிறுமியின் மரணத்திற்கு அவரது தாயே காரணமாக இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்ற நிலையில், 40 வயதுடைய தாயார் தற்போது பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளார்.