கனடாவில் 15 வயது சிறுவன் குத்திக் கொலை
கனடாவில் வாங்கூவரின் டவுன்டவுன் பகுதியில் 15 வயது சிறுவன் ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம், வங்கூவர் நீதிமன்ற வளாகத்திற்கு அருகிலுள்ள ஹவ் தெருவில், இரவு 11.40 மணியளவில் வழியே சென்ற ஒருவர் 911-ஐ அழைத்ததினால் வெளியாகியது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸாரும், பிற அவசர சேவை ஊழியர்களும் சிறுவனுக்கு முதலுதவி அளித்துள்ளனர்.
ஆனால், சிறுவன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என வங்கூவர் பொலிஸ் திணைக்களத்தின் பேச்சாளர் சார்ஜென்ட் ஸ்டீவ் அடிசன் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை என்றும், சந்தேகநபர்கள் குறித்த தகவல்கள் தெரிவிக்க முடியாது என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தையடுத்து, ராப்சன் சதுக்கம் மற்றும் சுற்றியுள்ள தெருக்கள் காவல்துறையினரால் மூடப்பட்டன.
இவ்வழக்கைச் சார்ந்த மேலதிக தகவல்களுக்கோ அல்லது உதவிக்கோ, வங்கூவர் காவல்துறையிரை தொடர்புகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.