கனடாவில் ஓடும் பஸ்ஸில் சிறுவன் மீது கொடூரத் தாக்குதல்
கனடாவில் ஓடிக் கொண்டிருந்த பஸ்ஸில் பயணித்த சிறுவன் மீது கொடூரத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
இட்டாபிகொக் பகுதியில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ரீ.ரீ.சீ பஸ்ஸில் பயணம் செய்து கொண்டிருந்த 16 வயதான சிறுவன் மீது கத்தி குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கத்தி குத்து தாக்குதலில் சிறுவன் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தாக்குதல் நடத்திய இளைஞர் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த சனிக்கிழமை முதல் இதுவரையில் பொதுப் போக்குவரத்து சேவைகளில் ஐந்து பேர் மீது கத்தி குத்து தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.
பொதுப் போக்குவரத்து சேவைகளில் இடம்பெற்று வரும் இவ்வாறான தாக்குதல்கள் குறித்து உடன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ரீ.ரீ.சீயின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரிக் லியேரி தெரிவிக்கின்றார்.
தாக்குதல் சம்பவம் தொடர்பில் பல்வேறு கோணங்களில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.