கனடாவிற்குள் சீஸ் டின்களில் போதைப் பொருள் கடத்திய நபர் கைது
கனடாவிற்குள் சீஸ் டின்களில் போதைப் பொருள் கடத்திய ஒருவரை அந்நாட்டு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
ஜமைகாவிலிருந்து கனடாவின் பியர்சன் விமான நிலையத்திற்கு வந்த ஒரு பயணியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சுமார் 2 மில்லியன் கனேடிய டாலர் மதிப்புள்ள கோக்கெய்ன் போதைப் பொருள் குறித்த நபரிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது.
குறித்த நபர், பதப்படுத்தப்பட்ட சீஸ் டப்பாக்களில் மறைத்து போதபப் பொருட்களை கடத்த முயன்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சுமார் பதினெட்டு கிலோ கிராம் எடையுடைய கொக்கேய்ன் போதைப் பொருள் மீட்கப்பட்டதாக கனடிய எல்லைப் பாதுகாப்பு முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சந்தேக நபர் மேலதிக விசாரணைக்காக பொலிஸாரிடம் ஒப்படைத்ததாக எல்லைப் பாதுகாப்பு முகவர் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் மீட்கப்பட்ட போதைப் பொருட்களும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.