கட்டுநாயக்க விமான நிலையத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் - யுவதி கைது!
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து யாழ்ப்பாணத்தை சேர்ந்த இருவரை குடிவரவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
சட்டவிரோதமாக வெளிநாட்டு செல்ல முயன்ற 27 வயதான இளைஞன் மற்றும் 19 வயதான யுவதியை இன்றைய தினம் (09-11-2023) காலை குடிவரவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
குறித்த இருவரும், துபாய் செல்வதற்காக இன்று 01.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இதேவேளை, அவர்களின் ஆவணங்கள் தொடர்பில் சந்தேகமடைந்த அதிகாரிகள் அவர்களை குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
இருவரின் கடவுச்சீட்டுகளை பரிசோதித்த அதிகாரிகள் பிரான்ஸ் மற்றும் ஜப்பானுக்கு செல்வதற்காக போலியான தகவல்களுடன் இரண்டு போலி விசாக்கள் தயாரிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.