ஒட்டாவாவில் கோர வெடிப்புச் சம்பவம்
கனடாவின் ஒட்டாவாவில் கோர வெடிப்புச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
கட்டுமான நிறுவனமொன்றில் இந்த பாரிய வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஒட்டாவாவின் ஹார்வெஸ்ட் வெலி அவன்யூ பகுதியில் இந்த கட்டுமான நிறுவனத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எரிவாயு கசிவு காரணமாக இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்த வெடிப்புச் சம்பவத்தினால் அருகாமையில் இருந்த வீடுகளின் ஜன்னல்கள் வெடித்துள்ளதுடன், சில கிலோ மீற்றர்கள் வரையில் வெடிப்புச் சத்தம் கேட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வெடிப்புச் சம்பவத்தில் 11 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வெடிப்புச் சம்பவத்தினால் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிய இரண்டு பேரை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
இடிபாடுகளுக்குள் சிக்கி மீட்கபட்டவர்கள் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெடிப்புச் சம்பவத்தில் அருகாமையில் இருந்த நான்கு வீடுகள் சேதமடைந்திருந்ததாக தீயணைப்பு படையினர் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.