கனடாவில் நீச்சல் தடாகத்தில் குதித்த இளைஞனுக்கு நேர்ந்த பரிதாபம்
கனடாவின் மொன்றியலில் நீச்சல் தடாகத்தில் குதித்த 21 வயதான இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இன்றைய தினம் அதிகாலை 3.30 மணிக்கு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மொன்றியலின் ரொஜர் ரொசாவூ பூங்காவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சுமார் இருபது வயது மதிக்கத் தக்க இரண்டு இளைஞர்கள் நீச்சல் தடாகத்தில் குதித்துள்ளனர்.
இதில் ஒரு இளைஞர் நீச்சல் தடாகத்தின் கீழ் பகுதிக்கு சென்று சலமற்ற நிலையில் இருந்தார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த இளைஞரை மீட்டு முதலுதவி அளிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், இளைஞரின் உயிரை காப்பாற்ற முடியவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என்பதுடன் சம்பவம் குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.