கனடாவில் விபத்தில் சிக்கி தீயணைப்பு வீரர்கள் காயம்
ஒன்டாரியோ மாகாணத்தின் உக்ஸ்பிரிட்ஜில், விபத்து இடத்துக்கு சென்று உதவி செய்த மூன்று தன்னார்வத் தீயணைப்பு வீரர்களை ஒரு வாகனம் மோதியதில் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை இரவு வெக் வீதி மற்றும் ஹைவே 47 பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
அந்த விபத்து இடத்தில் பணியாற்றிய மூன்று தீயணைப்பு வீரர்களையும் அருகில் வந்த மற்றொரு வாகனம் மோதியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடுமையான ஆனால் உயிருக்கு ஆபத்தில்லாத காயங்களுடன் அவர்கள் டொரண்டோ பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
காயமடைந்தவர்களில் ஒருவரை பின்னர் மருத்துவமனையிலிருந்து வெளியேற்றியுள்ளனர்.
ஆரம்பத்தில் நடந்த விபத்தில் ஈடுபட்டிருந்த ஓர் ஓட்டுநரும் மிகக் கடுமையான காயங்களுடன் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசாரணை காரணமாக அந்த பகுதி பல மணி நேரம் போக்குவரத்துக்கு மூடப்பட்டிருந்தது.