ஒன்டாரியோவில் சட்டவிரோதமாக வெளிநாட்டவர்களை வேலைக்கு அமர்த்திய நிறுவனங்களுக்கு அபராதம்
ஒன்டாரியோவில் சட்டவிரோத வேலை வாய்ப்பு வழங்கிய குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட மூன்று நிறுவனங்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கனடிய மத்திய அரசாங்க விசாரணைகளின் பின்னர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணையில் 700க்கு மேற்பட்ட அனுமதியில்லா வெளிநாட்டு பிரஜைகள் கண்டறியப்பட்டுள்ளனர்.
கனடாவின் எல்லை பாதுகாப்பு சேவை (CBSA) வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Ajax, Ont. நகரை தளமாகக் கொண்ட CDA Landscape Services நிறுவனம், அனுமதியில்லாத வெளிநாட்டவர்களை வேலைக்கு அமர்த்திய 20 குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதாகவும் அதன் அடிப்படையில் குறித்த நிறுவனத்திற்கு $400,000 அபராதம் விதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மற்ற இரண்டு நிறுவனங்களான TDA Landscape Services மற்றும் SDA Services தலா இரண்டு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து அவற்றுக்கு தலா 25,000 டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டில், ஒரு வெளிநாட்டை பிரஜையை போதை நிலையில் வாகனம் செலுத்தியதற்காக கைது செய்த போது இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஒன்டாரியோ மற்றும் ரொறன்ரோபெரும்பாக பகுதிகளில் தங்கியுள்ள சட்டவிரோத வெளிநாட்டு குடியேறிகளின் வலையமைப்பு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணையின் போது, கனடாவில் வேலை செய்ய அனுமதியில்லாத 700க்கும் அதிகமான வெளிநாட்டவர்கள் கண்டறியப்பட்டனர்"என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கண்டறியப்பட்ட பலர் நாடு கடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.