பிராம்டனின் கோர விபத்து; மூன்று பேர் பலி
பிராம்டனின் இடம்பெற்ற வாகன விபத்து சம்பவம் அன்றில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
கார் ஒன்று மரத்தின் மீது மோதியதனால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
எம்வேல்வ் அவென்யூ கான்சைட்டோகா டிரைவ் ஆகியனவற்றுக்கு இடைப்பட்ட பகுதியில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மரத்தில் மோதுண்ட வாகனம் தீப்பற்றி கொண்டதாக பீல் பிராந்திய போலீசார் தெரிவிக்கின்றனர்.
தீயை கட்டுப்படுத்தி வாகனத்தில் இருந்தவர்களை மீட்க முனைந்து போது வாகனத்தில் மூன்று பேரின் சடலங்களையே பொலிஸாரினால் மீட்க முடிந்துள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் 18 வயது மற்றும் அதற்கு குறைந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் பற்றிய மேலதிக விபரங்கள் எதையும் போலீசார் வெளியிடவில்லை.
வாகனத்தின் முன்பகுதி பலத்த சேதத்திற்கு உள்ளாகி இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது, இந்த சம்பவம் தொடர்பில் போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.