கனடாவில் அறிமுகமாகும் புதிய ட்ரோன் விதிமுறைகள்
கனடாவில் புதிய ட்ரோன் விதிமுறைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. கனடிய போக்குவரத்துத்துறை இந்த புதிய விதிமுறைகளை அறிமுகம் செய்துள்ளது.
இதன் மூலம், உரிய சான்றிதழ் பெற்ற தொழில்முறை ட்ரோன் இயக்குநர்கள் இனி சில வகை பறப்புகளுக்காக “Special Flight Operations Certificate” எனப்படும் அனுமதிப் பத்திரம் பெற தேவையில்லை.
அனுமதி இன்றி செய்யக்கூடிய பறப்புகளில் பின்வரும் வகைகள் அடங்கும்:

விமான நிலையங்களிலிருந்து விலகியுள்ள, அதிக அபாயமற்ற குறைந்த உயர பறப்புகள் (BVLOS)
கட்டுப்படுத்தப்பட்ட வான்வழியில் கட்டிடங்கள் அல்லது அமைப்புகளுக்கு அருகே சிறிய ட்ரோன்களுடன் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பான பறப்புகள்
நீட்டிக்கப்பட்ட கண்ணுக்குத் தென்படும் வரையறைக்குள் (EVLOS), சான்றளிக்கப்பட்ட பார்வையாளர் உதவியுடன் கட்டுப்படுத்தப்படாத வான்வழியில் மேற்கொள்ளப்படும் பறப்புகள்
25 கிலோ முதல் 150 கிலோ வரை எடையுடைய நடுத்தர ட்ரோன்கள் கட்டுப்படுத்தப்பட்ட வான்வழியில் கண்ணுக்குத் தென்படும் வரையறைக்குள் (VLOS) பறப்புகள்
கட்டுப்படுத்தப்பட்ட வான்வழி என்பது விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையங்களால் பராமரிக்கப்படும் பகுதி. இவை பெரும்பாலும் விமான நிலையங்கள், இராணுவ தளங்கள், அரசாங்கக் கட்டிடங்கள் அல்லது அணு நிலையங்கள் போன்ற இடங்களில் அமைந்துள்ளன.
இந்த புதிய விதிகள் திரைப்படம், தொலைக்காட்சி, நிலச் சொத்து, அடிக்கட்டு பரிசோதனை மற்றும் வேளாண்மை போன்ற துறைகளில் பணியாற்றும் ட்ரோன் இயக்குநர்களுக்கு அதிக சுதந்திரத்தை அளிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது கனடிய வணிகங்களுக்குப் புதுமை செய்யவும், வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், உலக ட்ரோன் பொருளாதாரத்தில் கனடாவின் நிலையை வலுப்படுத்தவும் உதவும் என தெரிவிக்கப்படுகின்றது.