ஆபரேஷன் தியேட்டர் வரை நடனமாடி சென்ற 3 வயது சிறுவன்! இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ!
அமெரிக்காவில் 3வயது சிறுவன் ஒருவர் இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டிருக்கும் போது மகிழ்ச்சியாக ஆபரேஷன் தியேட்டர் வரை நடனமாடியே சென்ற வீடியோ ஒன்று வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை கடந்த 5ஆம் தேதி மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
Waylen Blount என்ற சிறுவன் கடந்த பிப்ரவரி மாதம் புளோரிடா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு 259 நாட்கள் சிகிச்சை பெற்ற Waylen Blount டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறுவை சிகிச்சைக்கு செல்லும் போது தனக்கு எந்தவிதமான ஆபரேஷன் நடக்க உள்ளது என்பது அறியாமல் மருத்துவர்களுடன் ஆடிப் பாடியவாறு ஆபரேஷன் தியோட்டர்க்கு சென்றுள்ளான்.
இச்சம்பவம் அங்கு இருந்தவர்கள் பெரிதும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தற்போது சிறுவனின் இந்த வீடியோ இணையத்தில் பெரிதும் தற்போது வைரலாகி வருகின்றது.