அல்பேனியாவில் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் ; 30பேருக்கும் மேற்பட்டவர்கள் காயம்
அல்பேனியா தலைநகரான திரானாவில் நடைபெற்ற அரசாங்கத்திற்கு எதிரhன போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பிரதமர் எடி ராமாவின் இராஜினாமாவைக் கோரிய நிலையில், போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே வன்முறை மோதல்கள் வெடித்தன.
பத்திரிகையாளர்கள் மற்றும் காவல்துறையினர் உட்பட 30 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

போராட்டம் அமைதியாகத் தொடங்கிய போதிலும், முகமூடி அணிந்த சிறிய குழுக்கள் பிரிந்து சென்றுஇ பேரணி சென்ற வழியில் இருந்த அமைச்சகக் கட்டிடங்களின் ஜன்னல்களை உடைக்கத் தொடங்கின.
கற்கள் வீசியும், மரக் கட்டைகளைக் கொண்டு தெருக் கெமராக்கள் மற்றும் அரசுக் கட்டிடங்களின் ஜன்னல்களை உடைக்க முயன்ற போது வன்முறையில் ஈடுபட்ட போராட்டக்காரர்களைக் கலைக்கக் பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த் தாக்கு தல் இயந்திரங்களை பயன்படுத்தினர்.
பல்வேறு வீதிகளில் போராட்டக்காரர்கள் பரவியதால் அப்பகுதி முழுவதும் கண்ணீர்ப்புகை மூட்டம் சூழ்ந்தது. அல்பேனியாவின் 114 ஆவது சுதந்திரப் பிரகடன ஆண்டு விழாவையொட்டி நடைபெற்ற இந்தப் பேரணிக்காக, நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் மக்கள் திரளாக வந்திருந்தனர்.
பொதுவாக இந்த நாள் கொண்டாட்டங்கள் மற்றும் பொது விடுமுறையுடன் அனுசரிக்கப்படுவது வழக்கம். தலைநகருக்குள் வரும் மற்றும் வெளியே செல்லும் முக்கிய வீதிகளில் பொலிஸார் குவிக்கப்பட்டு வாகனச் சோதனை நடத்தினர்.
பிரிட்டனில் இருந்து திரானாவுக்குப் போராட்டத்திற்காகவே வந்ததாகக் கூறிய 33 வயதான ஏரியன் லெஷி, நீண்ட காலமாக மக்கள் துன்பப்பட்டு வருவதாகவும ஐரோப்பா மற்றும் உலகம் முழுவதும் சிதறிக் கிடப்பதால் நாடற்ற குடிமக்களைப் போல உணர்வதாகவும் வேதனை தெரிவித்தார்.
1990-களில் கம்யூனிச ஆட்சி வீழ்ந்ததில் இருந்து அல்பேனியாவில் உள்ள அரசியல் கட்சிகள் யாரையும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்றும் நாட்டின் எதிர்காலத்தில் அக்கறை கொண்ட புதிய தலைமுறை புத்திஜீவிகளுக்கு அவை வழிவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.