38 தடவை தாக்குதலிற்கு இலக்கான அமெரிக்க தளங்கள்
ஒக்டோபர் 17ம் திகதிக்கு பின்னர் சிரியா ஈராக் உள்ள அமெரிக்க தளங்கள் 38 தடவை தாக்குதலிற்கு இலக்காகியுள்ளன என பென்டகன் தெரிவித்துள்ளது.
ரொக்கட்கள் ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி ஈரான் சார்பு குழுக்கள் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளன என தெரிவித்துள்ள பென்டகன் , இதில் 45 அமெரிக்க படையினர் காயமடைந்துள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் தாக்குதலில் 24 படையினர் கடும் காயங்களிற்குள்ளாகியுள்ளனர் எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்காவிற்கு மத்தியகிழக்கில் நான்கு நோக்கங்கள் உள்ளதாகவும் அதில் ,
ஹமாசிற்கு எதிரான நடவடிக்கைக்கு இஸ்ரேலிற்கு அவசியமான பாதுகாப்பு உதவிகளை வழங்குவது, இஸ்ரேல் பணயக்கைதிகளை விடுதலை செய்ய உதவுவது ஆகியன முக்கியமான நோக்கங்கள் எனவும் பென்டகன் தெரிவித்துள்ளது.