10 நாட்களில் 3 வது சோதனை; மிரட்டும் வடகொரியா
அடிக்கடி அணு ஆயுத ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளுக்கு அதிர்ச்சி கொடுத்துவரும் நாடு வடகொரியா. அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளை அச்சுறுத்தும் வகையிலேயே இந்த ஏவுகணை சோதனைகளில் வடகொரியா ஈடுபட்டு வருகிறது.
இதனூடாக , தங்கள் ஆயுத பலத்தை உலக நாடுகளுக்கு வெளிப்படுத்தி வருகிறது. இதற்கிடையில், இந்த ஆண்டு தொடக்கம் முதல் வடகொரியா தனது ஏவுகணை சோதனையை தீவிரப்படுத்தியுள்ளது.
தொலைதூர இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் ஏவுகணையை கடந்த 5 ஆம் திகதி வடகொரியா பரிசோதனை செய்தது. அந்த சோதனையை தொடந்து கடந்த 11 ஆம் திகதி ஹைப்பர் சோனிக் ஏவுகணையை ஏவி 2 ஆவது பரிசோதனை செய்தது.
இதையடுத்து, ஏவுகணை சோதனை நடத்தியதற்காக வடகொரியா மீது அமெரிக்கா பொருளாதாரத்தடைகள் விதித்ததுடன், வடகொரியாவை சேர்ந்த 5 அதிகாரிகள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது.
இந்நிலையில், வடகொரியா இன்று மீண்டும் ஏவுகணை பரிசோதனை செய்துள்ளது. 10 நாட்களில் மேற்கொள்ளப்படும் 3-வது ஏவுகணை பரிசோதனை இதுவாகும். இன்று மொத்தம் 2 ஏவுகணைகளை வடகொரியா சோதனை செய்துள்ளது.
ரெயில் இருந்து ஏவப்பட்ட இரண்டு ஏவுகணைகள் கடல்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த இலக்கை துல்லியமாக சென்று தாக்கி அழித்தது.
இந்நிலையில் வடகொரியா மீது அமெரிக்கா விதித்த பொருளாதார தடைகளுக்கு பதிலடியாகவே இந்த சோதனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.