ஹமில்டனில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் பலி
கனடாவின் ஹமில்டனில், 42 வயதுடைய ஒரு பெண்மணி பிக்கப் லாரி மோதி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணை தொடங்கி உள்ளனர்.
சனிக்கிழமை மாலை அன்காஸ்டர் பகுதியில் உள்ள வில்சன் ஸ்ட்ரீட் மேற்கு மெக்லயர் வீதி அருகே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் கடுமையாக காயமடைந்த பெண்மணியை ஹமில்டன் அவசர மருத்துவ சேவை (EMS) மூலம் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.
எனினும் குறித்த பெண் உயிரிழந்து விட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஹமில்டன் பொலிஸார் விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பதை தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பான கூடுதல் தகவல் அல்லது டாஷ்கேம் காட்சி யாரிடமும் இருந்தால், ஹமில்டன் பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.