வெளிநாடொன்றில் இடம்பெற்ற பயங்கர விபத்துகளில் 50 பேர் உயிரிழப்பு! 76 பேர் காயம்
ஆப்கானிஸ்தானில் உள்ள காபுல் - கந்தஹார் நெடுஞ்சாலையில் நடந்த இரண்டு வேறு சாலை விபத்துகளில் 50 பேர் உயிரிழந்தாகவும், 76 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நேற்றையதினம் (18-12-2024) பிற்பகுதியில் காபுல் - கந்தஹார் நெடுஞ்சாலையில் பயணிகள் பேருந்து மற்றும் எண்ணெய் ஏற்றி சென்ற டேங்கர் லொறியும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
மற்றொரு சம்பவம் அதே நெடுஞ்சாலையில் ஆப்கானிஸ்தான் தலைநகரை இணைக்கும் பகுதியில் நடந்தது. இந்த 2 விபத்துகளில் மொத்தம் 50 பேர் உயிரிழந்தனர். மேலும் 76 பேர் காயமடைந்த நிலையில் கஸ்னியில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த இரண்டு விபத்துகள் குறித்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.