பிலிப்பைன்ஸில் 7.7 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ; சுனாமி எச்சரிக்கை
இரண்டாம் இணைப்பு
பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தில் 129 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பிலிப்பைன்ஸில் இன்று (8) காலை 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவானது.
இந்த நிலநடுக்கம் 10 கி.மீ கடல் ஆழத்தில் ஏற்பட்டதாக ஜேர்மனிய புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது. பிலிப்பைன்ஸ் மற்றும் அதன் அண்டை நாடான இந்தோனேசியாவுக்கு சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன. பின்னர் இந்தோனேசியாவில் சுனாமி எச்சரிக்கை நீக்கப்பட்டது.
அதேநேரம் நிலநடுக்கத்தில் பல கட்டிடங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதலாம் இணைப்பு
பிலிப்பைன்ஸ் - மின்டானோ தீவில் 7.7 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதீச தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து பிலிப்பைன்ஸ் , இந்தோனேசியா , மலேசியா நாடுகளின் கரையோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து வீடுகளில் இருந்த மக்கள் விரைந்து வெளியேறினர். நிலநடுக்கம் உணரப்பட்ட இடத்தில் வீடுகள் மற்றும் அலுவலகம், வணிக கட்டிடங்களில் இருந்த தொலைக்காட்சி, நாற்காலி, மேசை உள்ளிட்ட பொருட்கள் விழுந்த காணொளி வெளியாகியுள்ளது.
சமூக வலைதளத்தில் வீடியோவில் வணிக கட்டிடம் ஒன்று இடிந்து விழுவதும், சாலை போக்குவரத்து சிக்னல் சந்திப்பில் உள்ள சிக்னல் விளக்குகள் குலுங்குவது போன்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளது.