நொடிகளில் நடந்த விபரீதம் ; நாய் கடித்து பரிதாபமாக உயிரிழந்த 7 மாத குழந்தை
அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் கொலம்பஸ் என்ற பகுதியில் வசித்து வந்த ஏழு மாத குழந்தையை வீட்டில் வளர்த்த பிட்புல் நாய் கடித்துக் கொன்றுள்ளது பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் வீட்டில் மொத்தம் 3 பிட்புல் நாய்களை வளர்த்து வந்த நிலையில், அதில் ஒரு நாய் இந்தச் சிறுமியைக் கடித்துக் கொன்றுள்ளது.
ஏழு மாத குழந்தை பிட்புல் தாக்குதலால் உயிரிழந்துள்ளதை உள்ளூர் நிர்வாகம் உறுதி செய்துள்ளது. இது குறித்து கொலம்பஸ் பொலிஸ் சார்ஜென்ட் ஜேம்ஸ் ஃபுகுவா கூறுகையில்,
"சவுத் சாம்பியன் அவென்யூவின் 3700 பிளாக்கில் அமைந்துள்ள ஒரு வீட்டில் எலிசா என்ற குழந்தையை அவர்கள் வீட்டிலேயே வளர்த்த நாய் கடித்துள்ளது.
இந்தச் சம்பவத்தை நினைத்தால் எங்களுக்கும் கஷ்டமாகவே இருக்கிறது. அங்கு நிலைமை நொடியில் மாறியிருக்கிறது. கண்ணிமைக்கும் நேரத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
இப்போது வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த 3 நாய்களும் உள்ளூர் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வீட்டில் என்ன நடந்தது என்பது குறித்து விசாரித்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இந்தச் சம்பவம் நெட்டிசன்களிடையேயும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.