இரவு நேர களியாட்ட விடுதி கூரை இடிந்து விழுந்ததில் 79 பேர் பலி
டொமினிக்கன் குடியரசில் சாந்தோ டொமிங்கோவில் உள்ள பிரபலமான இரவு நேர களியாட்ட விடுதியின் கூரை இடிந்து விழுந்ததில் 79 பேர் உயிரிழந்துள்ளதுடன், 160 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இசை நிகழ்ச்சி ஒன்று நடந்து கொண்டிருந்த வேளையிலேயே இந்த துயரச் சம்பவம் இடம் பெற்றுள்ளது. சம்பவம் அறித்து விரைந்து சென்ற மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிக்களை ஆரம்பித்துள்ளனர்.
அதேவேளை சம்பவம் இடம் பெற்று 12 மணி மணித்தியலாத்திற்கும் பின்னரும் சிலர் இன்னும் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது.
இந்நிலையில், சம்பவத்தில் சிக்கி உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு அந்நாட்டு ஜனாதிபதி லூயிஸ் அபினாடர் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.