சுவிஸில் ஒரே நாளில் 9 பேர் கொரோனாவால் மரணம்!
சுவிஸில் கொரோனா தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 1ஆயிரத்து 502பேர் பாதிக்கப்பட்டதோடு 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுவிஸில் இதுவரை மொத்தமாக 8இலட்சத்து 33ஆயிரத்து 383பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், 11ஆயிரத்து 052பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 68ஆயிரத்து 139 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் 209 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக, 7 இலட்சத்து 54ஆயிரத்து 192பேர் பூரண குணமடைந்துள்ளனர்.