போர் நாளையே முடிவுக்கு வரலாம் ; சவூதி அதிகாரி
ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவு பெற்ற சமாதானத் திட்டத்திற்கு ஹூதிகள் ஒப்புக்கொண்டால், யேமனில் போர் நாளையே முடிவுக்கு வரலாம் என்று சவூதி தலைமையிலான கூட்டணியின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
மேஜர் ஜெனரல் துர்கி அல்-மாலிகி ராய்ட்டர்ஸுக்கு வழங்கிய நேர்காணலில், ஏடன் ஒரு “சிவப்புக் கோடு” என்றும், தெற்கு யேமன் நகரத்தைப் பாதுகாக்க கூட்டணி தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்றும் கூறினார்.

செயல்முறை மட்டத்தில் உள்ள குறைபாடுகளை யேமன் அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாகவும், அவை சரிசெய்யப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
சிறந்த தீர்வு அரசியல் தீர்வுதான். ஆனால், யேமன் அரசாங்கம் தங்கள் இலக்கை அடைய நாம் ஆதரவளிக்க வேண்டும் என்றும் அல்-மாலிகி கூறினார்.
சவூதி அரேபியாவிடம் இடைமறிப்பு ஏவுகணைகளுக்குப் பற்றாக்குறை இல்லை என்றும், தன்னைத் தற்காத்துக் கொள்ளும் திறன் அதற்கு உள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.