சீனாவின் யுனானில் 9 பேர் பலி
சீனாவின் தென்மேற்கு யுன்னான் பகுதியில் திங்கட்கிழமை ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. இந்நிலையில் மண் சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
மண்சரிவில் 18 வீடுகள் புதையுண்டுள்ளதோடு, அதில் 47 பேர் சிக்குண்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், அவர்களில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதோடு, இருவர் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
அதேவேளை யுன்னான் மாகாணத்தில் தற்போது கடுமையான குளிர் நிலவி வருவதாக சீன தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி மங்கோலியா பகுதியில் குறைந்தது 70 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.