கனடாவில் பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபட்ட 91 வயது முதியவர் கைது
கனடாவின் பர்லிங்டன் நகரில், ஐந்து மாத காலப்பகுதியில் ஐந்து வெவ்வேறு பாலியல் வன்கொடுமைச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 91 வயது முதியவர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நவம்பர் மாத நடுப்பகுதியில், பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள பெண் ஒருவரைச் சந்தேகநபர் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து பொலிஸார் விசாரணையை ஆரம்பித்தனர்.
இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், ஜூலை மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில் பர்லிங்டனில் பாதிக்கப்படக்கூடிய நிலையிலிருந்த இரண்டு வயது வந்த பெண்கள் மீது நடத்தப்பட்ட மொத்தம் ஐந்து பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களுக்கும் அதே சந்தேகநபரே காரணம் என்பதைப் புலனாய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக பர்லிங்டன் நகரைச் சேர்ந்த 91 வயதான எவால்ட் ராட்கே என்ற சந்தேகநபர் நவம்பர் 20 ஆம் திகதி கைது செய்யப்பட்டு, அவர் மீது ஐந்து பாலியல் வன்கொடுமைக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இவரால் பாதிக்கப்பட்ட மேலும் பலர் இன்னும் முன்வந்து முறைப்பாடு அளிக்காமல் இருக்கலாம் எனப் புலனாய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.