90'ஸ் கிட்ஸை கடுப்பேத்திய 70 வயது முதியவர்!
பாகிஸ்தானில் 19 வயது இளம் பெண்ணை 70 வயதுடைய முதியவர் காதல் திருமணம் செய்துள்ள சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானைச் சேர்ந்தவர் லியாகத். இவருக்கு 70 வயதாகிறது. இவர் தினமும் காலையில் எழுந்து நடைப்பயிற்சி செய்வதை வழக்கமாக வைத்துக் கொண்டிருந்தார்.
தினமும் வாக்கிங் செல்லும்போது ஷுமைலா என்ற 19 வயது கொண்ட பெண்ணிடம் சந்தித்துள்ளார். இவர்கள் இருவரும் நட்புடன் பழகி வந்துள்ளனர்.
இந்த நட்பு நாளடைவில் இருவருக்குள் காதலாக மாறியுள்ளது. தற்போது, 19 வயது கொண்ட ஷுமைலாவை லியாகத் காதல் திருமணம் செய்துள்ளார்.
girl marries 70 year old, 19 year old girl who married a 70 year old man.. Is this love?! – 19 year old girl marries 70 year old man in Pakistan https://t.co/eeVX6mEzb9
— Bollywoodlifegossip (@bollywoodlifgsp) November 16, 2022
இது குறித்த வீடியோக்களும், புகைப்படங்களும் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.