சீன மழலையர் பள்ளியில் ஈவிரக்கமின்றி நடத்தப்பட்ட தாக்குதல்; ஆறு பேர் பலி
சீனாவில் உள்ள தனியார் மழலையர் பள்ளியில் நடத்தப்பட்ட கத்திகுத்து சம்பவத்தில் மூன்று பேர் வரை கொல்லப்பட்டதுடன் ஆறு பேர் வரை காயமடைந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனாவில் இன்று காலை அன்ஃப் கவுண்டி பகுதியில் உள்ள தனியார் மழலையர் பள்ளியில் முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் நடத்திய தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஆறு பேர் வரை காயமடைந்தனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் வயது இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில், ஜியாங்சியில் உள்ள பொலிசார் Weibo என்ற இணையதளத்தில் செய்தியினை வெளியிட்டனர்.
அத்துடன் பொலிஸ் அதிகாரிகள் இந்த சம்பவம் தொடர்பான சந்தேகத்திற்குரிய 48 வயதான லியு மெளஹுய் என்ற நபரின் அடையாளங்களையும் வெளியிட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட உறுதிப்படுத்தப்படாத காட்சிகளில் தனது கைகளில் சிறிய குழந்தையை காரில் இருந்து ஆம்புலன்ஸுக்கு எடுத்து செல்வதைக் காட்டுகிறது.
சந்தேகநபர் லியு மெளஹுய் இன்னும் தலைமறைவாக உள்ளதாகவும், தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்றதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.