நடப்பாண்டில் அமெரிக்காவில் ஏற்பட்ட பாரிய அனர்த்தம்!
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் வேகமாகப் பரவும் காட்டுத்தீ, இவ்வாண்டின் ஆகப்பெரிய தீச்சம்பவமாக உருவெடுத்துள்ளது.
இதன்போது 6,300 ஹெக்டர் நிலப்பரப்பு தீக்கிரையாகியுள்ளது. அது கிட்டத்தட்ட பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பாதி என தெரியவந்துள்ளது.
அந்தத் தீ முதன்முதலில் கலிபோர்னியாவின் மரிபோசா (Mariposa) பகுதியில் தொடங்கியது.
அது பிரபல யோசமிட்டி (Yosemite) தேசியப் பூங்காவில் இருந்து 16 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
காட்டுத் தீயில் 10 விழுக்காடு மட்டுமே கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
நெருப்பை ஒடுக்கச் சுமார் ஈராயிரம் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
மேலும் காட்டுத்தீ மூண்டதற்கான காரணம் விசாரிக்கப்பட்டு வருகிறது.