கனடாவில் புலம்பெயர் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அரிய வாய்ப்பு!!
கனடா டொரன்டோ-நிரந்தர குடியுரிமை பெற்றவர்களும் ராணுவத்தில் இணையலாம் என்ற தளர்வை கனடா ராணுவம் அறிவித்துள்ளது. இதனால், கனடா வாழ் புலம்பெயர் மக்களுக்கு புதிய வாய்ப்பு கிடைத்துள்ளது.
கனடாவில் உள்ள ஆர்.சி.எம்.பி., எனப்படும் 'ராயல் கனடா மவுன்டட்' போலீஸ் படைப் பிரிவில், ஆட்களை சேர்ப்பதற்கான விதிமுறைகள், ஐந்து ஆண்டுகளுக்கு முன் திருத்தப்பட்டன. அதன்படி, 10 ஆண்டு கனடாவில் வசித்து நிரந்தர குடியரிமை பெற்றவர்களும் கனடிய இராணுவ படைப் பிரிவில் சேர முடியும்.
அரிய வாய்ப்பு
இந்நிலையில், சி.ஏ.எப்., எனப்படும் கனடா ஆயுதப் படையும், தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பானது , கனடா வாழ் இந்தியர்களுக்கு புதிய வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
எனினும் தற்போதைய நிலையில், கனடாவைச் சேர்ந்த, 18 வயது நிரம்பிய, குறைந்தபட்சம், பிளஸ் 2 வகுப்பு படித்தவர்கள் மட்டுமே, அதிகாரிகள் பதவிக்கு விண்ணப்பிக்க முடியும்.
இனி, இந்தத் தகுதியுள்ள இந்தியர் உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த நிரந்தர குடியுரிமை பெற்றவர்களும் இராணுவத்தில் சேர விண்ணப்பிக்க முடியும். கனடா ஆயுதப் படையில், இந்த ஆண்டில் கனடிய இராணுவத்திற்கு ஆள்சேர்க்கை இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் போதிய அளவில் விண்ணப்பங்கள் வராததால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதேவேளை கனடாவில் தற்போது, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட நிரந்தர குடியுரிமை பெற்ற இந்தியர்கள் உள்ளனர். கனடாவுக்கு வரும் வெளிநாட்டவர்களில், ஐந்தில் ஒருவர் இந்தியாவில் பிறந்தவர் ஆவார்.
அதுமட்டுமல்லாது கனடா ராணுவ அமைச்சராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்த் உள்ளமை குறிப்பிடத்தக்கது.