சீன வணிக வளாகத்தில் திடீர் தீ ; 16 பேர் உயிரிழப்பு
சீனாவின் மேற்கே அமைந்த சிச்சுவான் மாகாணத்தில் ஜிங்காங் நகரில் வணிக வளாகம் ஒன்றில் நேற்றிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் 16 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீ விபத்தை அடுத்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் அவசரகால பணியாளர்கள் ஏறக்குறைய 300-க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
சீனாவில் அடிக்கடி நிகழும் அனர்த்தம்
அவர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்ட நிலையில் தீ விபத்து ஏற்பட்டு 2 மணிநேரத்திற்கு பின்னர் தீயணைக்கப்பட்டது.
இந்நிலையில் வணைகள் வளாகத்தில் சிக்கியிருந்த 30 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளபோதும் மொத்தம் எத்தனை பேர் உள்ளே சிக்கியிருந்தனர் என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.
அதேவேளை சீனாவில், போதிய பாதுகாப்பு ஒழுங்குமுறைகள் மற்றும் சட்ட விதிகள் இல்லாத நிலையில், அடிக்கடி இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன.
கடந்த ஜனவரியில், தென்கிழக்கு சீனாவில் கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 39 பேர் உயிரிழந்ததுடன் 9 பேர் காயமடைந்தனர்.
மேலும் இதற்கு சில நாட்களுக்கு முன் அந்நாட்டின் மத்திய பகுதியில் அமைந்த ஹெனான் மாகாணத்தில் பள்ளிக்கூடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 13 குழந்தைகள் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.