மர்ம பெட்டி தொடர்பில் பாரிஸ் மக்களுக்கு விடுத்த எச்சரிக்கை!
பாரிஸ் மற்றும் அதன் புறநகரங்களில் பார்சல்களுடன் வீடுகளுக்கு வரும் நபர்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்லின் நகர பகுதியில் போலி பார்சல் விநியோகஸ்தர் மற்றும் அவரது நண்பர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த எச்சரிக்யை விடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வீடுகளுக்கு பார்சல்களுடன் வருடம் பார்சல் விநியோகஸ்தர் தங்களுக்கு பார்சல் வந்துள்ளதாகவும் அதற்கான கட்டணமாக ஒரு யூரோ செலுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
அவ்வாறு பணம் செலுத்தும் நபர்கள் அட்டை ஊடாக மாத்திரம் செலுத்த வேண்டும் எனவும் கட்டாயப்படுத்துகின்றனர். அவர்களை நம்பி பொது மக்களை ஏமாற்றி அவர்களின் வீட்டிற்குள் நுழையும் அளவு பழக்கம் ஏற்படுத்திக் கொள்வதாக குறிப்பிடப்படுகின்றது.
அதற்கமைய, அந்த விநியோக கட்டணத்தை செலுத்த வங்கி அட்டையை பெற்றுக் கொள்கின்றார்கள். அதனை பயன்படுத்தி அட்டையில் இரகசியமான முறையில் பணத்தை கொள்ளையடித்துவிட்டு அட்டையை மீள ஒப்படைப்பதாக தெரியவந்துள்ளது.
அதன் பின்னர் அவர்கள் வழங்கிய பார்சல் பெட்டியை திறந்து பார்த்தால் அதில் ஒரு கிலோ கிராம் சீனி மாத்திரமே காணப்பட்டுள்ளதாகவும் 860 யூரோக்கள் வங்கி அட்டையில் திருடப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இவ்லின் பகுதியை சேர்ந்த வயோதிபர் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டிற்கமைய, 37 வயதுடைய நபர் ஒருவரும் அவருக்கு உதவிய குற்றச்சாட்டில் 20 வயதுடைய இளைஞன் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர்களது வழக்கு விசாரணைகள் அடுத்த மாதம் இறுதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த இருவர் இணைந்து மேற்கொண்ட இந்த மோசடியில் இதுவரையில் 15,000 யூரோக்களுக்கு மேல் திருடப்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்களால் 33க்கும் மேற்பட்ட அட்டைகளே இதே முறையில் பெற்று பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சிலர் மோசடியில் ஈடுபடலாம். இது குறித்து பொது மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.