வீட்டில் தனிமையில் இருந்த பெண்ணுக்கு 57 வயது நபரால் நேர்ந்த நிலை!
சிங்கப்பூர், தோ பாயோவில் 57 வயது நபர் பாரிய கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவத்தில் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டிருப்பதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தின்போது அவர் கத்தியைப் பயன்படுத்தியதாக நம்பப்படுகிறது. இம்மாதம் 9ஆம் திகதி சம்பவத்தைப் பற்றித் தகவல் கிடைத்ததாக அதிகாரிகள் கூறினார்கள்.
காலை 11 மணியளவில் தோபாயோ லோரோங் 6இல் இருக்கும் கார் நிறுத்துமிடத்தில் உதவி நாடிக் பொலிஸாருக்கு தொலைபேசி அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட 48 வயதுப் பெண்ணின் வலது கையிலும் வயிற்றுலும் வெட்டு, கீறல் காயங்கள் காணப்பட்டன. அவர் சுயநினைவுடன் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.
அவரது நிலை சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. கண்காணிப்புக் கேமராப் பதிவுகள், மேல் விசாரணை ஆகியவற்றின் மூலம் பொலிஸார் சந்தேக நபரின் அடையாளத்தைக் கண்டுபிடித்துத் தகவல் கிடைத்த 24 மணி நேரத்திற்குள் அவரைக் கைது செய்துள்ளனர்.