கனடாவில் புதிய வாழ்வைத் துவங்கும் கனவுடன் புலம்பெயர்ந்த இளம் தம்பதியருக்கு நேர்ந்துள்ள சோகம்...
வெளிநாடு ஒன்றிலிருந்து புதிய வாழ்வைத் துவங்கும் கனவுடன் கனடாவுக்கு புலம்பெயர்ந்த இளம் தம்பதியர் சந்தித்த விபத்து ஒன்று, அவர்கள் கனவை சுக்குநூறாக்கிவிட்டது.
எமிலியாவும் (Emilia Ballester) அவரது கணவரான கார்லோசும் (Carlos Bastarrachea) பல இடையூறுகளுக்குப் பின் மெக்சிகோவிலிருந்து கனடாவுக்கு புலம்பெயர்ந்தவர்கள்.
புதிய வாழ்வைத் துவக்கும் கனவுடன் வந்த தம்பதியரின் கனவை விபத்து ஒன்று பாழாக்கிவிட்டது.
கனடா தினத்தன்று நடந்த பயங்கர வாகன விபத்து ஒன்றில் பாதிக்கப்பட்டவர்களில் கார்லோசும் ஒருவர். அந்த விபத்தில் சிக்கியவர்களில் ஒருவர் உயிரிழந்துவிட, கார்லோஸ் உயிர் பிழைத்தாலும், அவரது இடது காலை அகற்றவேண்டியதாகிவிட்டது!
Farrah Merali/CBC News
இத்தனைக்கும் பாதசாரிகள் கடக்கும் வழியாக, அனுமதிக்கப்பட்ட பிறகுதான் சாலையைக் கடந்துள்ளார்கள் தம்பதியர். ஆனாலும், கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று வேகமாக வந்து மேலும் இரண்டு கார்கள் மீது மோதியும் நிற்காமல் உருண்டு வந்து சாலையைக் கடந்துகொண்டிருந்தவர்கள் மீது மோத, ஒருவர் உயிரிழக்க, கார்லோஸ், எமிலியா மற்றும் ஆறு பேர் காயமடைய, தம்பதியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, பிறகு எமிலியா மட்டும் விடுவிக்கப்பட்டு வீடு சென்றுள்ளார்.
தங்கள் செல்லப்பிராணி நலமாக இருக்கின்றதா என்று பார்ப்பதற்காக எமிலியா வீட்டுக்குச் சென்றிருந்த நிலையில், அவசரமாக மருத்துவமனையிலிருந்து அழைப்பு வந்துள்ளது.
மருத்துவமனைக்கு விரைந்த எமிலியாவிடம் கார்லோசின் இடது காலை அகற்றவேண்டும் என கூறியிருக்கிறார்கள் மருத்துவர்கள்.
supplied by Emilia Ballester
நன்றாக நடனமாடக்கூடியவர் கார்லோஸ். நல்ல வேலை, கோடையில் ஹாக்கி பயிற்சி முதல் பல்வேறு திட்டங்கள். இப்படி, புதிய வாழ்வைத் துவக்கும் கனவுடன் கனடாவுக்கு வந்த நிலையில் ஒரு விபத்து வாழ்வையே மாற்றிவிட, முதலில் கோபம்தான் வந்தது என்கிறார் கார்லோஸ்.
என்றாலும், பாஸிட்டிவாக சிந்தித்து, நல்லவேளை, கால் போனாலும் பிழைத்துக்கொண்டேன், என் மனைவிக்கும் ஒன்றும் ஆகவில்லை என்பதில் மகிழ்ச்சி என்கிறார் அவர்.
Merhdad Nazarahari/CBC News
தற்போது சக்கர நாற்காலியில் வலம்வருவதற்கு ஏற்றாற்போல் வீட்டில் மாற்றங்கள், கார்லோசுக்கு செயற்கைக் கால் பொருத்துதல் என எக்கச்சக்கமாக செலவுகள் உள்ளன.
ஆகவே, GoFundMe பக்கம் மூலம் பொதுமக்களின் உதவியைக் கோரியிருக்கிறார்கள் தம்பதியர்.
Supplied by Emilia Ballester
Supplied by Emilia Ballester