டொரோண்டோவில் வௌவால்களினால் ஏற்பட்டுள்ள அபாயம்
கனடாவின் டொரோண்டோவின் வடகிழக்கு பகுதியில், வௌவால்களுடன் தொடர்புடைய நோய்கள் அதிகளவில் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த கோடை காலத்தில் வௌவால் காரணமாக ஏற்படக்கூடிய நோய்கள் தொடர்பில் பொது சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வௌவால்கள் ஊடாக ராபீஸ் நோய் பரவும் அபாயம் காணப்படுவதாக பொதுச் சுகாதார அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ராபீஸ் வைரஸ் தொற்று
வௌவால்களை பிடிக்க முயற்சிக்கும் போது அவை கடிப்பதனால் நோய்கள் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கடிக்கு உள்ளானவர்களுக்கு ராபீஸ் தொற்றினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் தொடர்பான அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வௌவால்களுக்கு ராபீஸ் வைரஸ் தொற்று பரவியுள்ளதாகவும் இதனால் மக்கள் அவதானமாக இருக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வௌவால் கடிக்க இலக்கானால் பாதிக்கப்பட்ட இடத்தை சவார்க்காரம் இட்டு நன்றாக கழுவ வேண்டுமென தெரிவிக்கப்படுகின்றது.
உரிய முறையில் சிகிச்சை பெற்றுக்கொள்ளத் தவறினால் உயிராபத்தைக் கூட ஏற்படுத்தக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.