உலகக் கிண்ணப் போட்டித் தொடரினால் கனடாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி
உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டித் தொடரினால் கனடாவில் ஹோட்டல் விலைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2026-ஆம் ஆண்டு உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டித் தொடர் கனடா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் நடைபெறவுள்ளது. பீபா உலகக் கோப்பைக்கு இன்னும் ஒரு ஆண்டுக்கும் குறைவாக இருக்கிறது.
ஆனால், டொரொன்டோ மற்றும் வான்கூவர் நகரங்களில் ஹோட்டல் விலைகள் ஏற்கனவே ரசிகர்களுக்கு பெரிய சவாலாக மாறி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் 2026ம் ஆண்டு ஜூன் 12 திகதி முதல், டொரொண்டோவில் 6 போட்டிகளும் வான்கூவரில் 7 போட்டிகளும் நடைபெறவுள்ளன. வான்கூவரில் ஹோட்டல் அறைகள் ஏற்கனவே மிக உயர்ந்த விலைக்கு போய்விட்டன.
சில இடங்கள் முழுமையாக முன்பதிவு ஆகிவிட்டன தெரிவிக்கப்படுகின்றது.