பாரம்பரியம் என்ற பெயரில் 1500 டால்பின்கள் கொன்று குவிப்பு

Praveen
Report this article
டென்மார்க் நாட்டின் வடக்கு அட்லாண்டிக் பகுதியில் பாரம்பரியத் திருவிழாவிற்காக 1500 டால்பின்கள் கொன்று குவிக்கப்பட்டது அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.
வடக்கு அட்லாண்டிக் கடற்பகுதியில் பரோயே தீவுக்கூட்டம் உள்ளது. இந்தத் தீவுகளில் வசிக்கும் மக்கள் தங்களது பாரம்பரியத் திருவிழாவைக் கொண்டாடும் விதமாக கடற்பகுதியில் உள்ள 1500 டால்பின்களை ஒரே நேரத்தில் வேட்டையாடி உள்ளனர். ஒரே நேரத்தில் இவ்வளவு எண்ணிக்கையில் டால்பின்கள் வேட்டையாடப்பட்டது சூழலியல் ஆர்வலர்களிடையே கண்டனத்தை எழுப்பியுள்ளது.
கடல்வாழ் சூழலுக்கு மிகுந்த நன்மையைத் தரும் டால்பின்கள் கொல்லப்பட்டதால் அந்தத் தீவுகளின் கரைகள் சிவப்பு நிறத்தில் காட்சியளித்தது.
இதையும் படிக்க | அரசியல் களமான மெட் காலா ஃபேஷன் நிகழ்ச்சி
சூழலியல் சமநிலையைப் பேணும் விதமாக அரசு இத்தகைய நிகழ்வுகள் நடக்காமல் தடுக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.