கியூபெக்கில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் பலி
கனடாவின், மேற்கு கியூபெக்கில், லஸ்க்வில் அருகே இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒரு இளைஞர் உயிரிழந்துள்ளார்.
கியூபெக் காவல்துறையினர் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
நெடுஞ்சாலை 148-இல் செமின் டி லா மோன்டாக்னே அருகே உள்ள ஒரு பகுதிக்கு காவல்துறையினர் அழைக்கப்பட்டுள்ளனர்.
அங்கு கிழக்கு நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் விபத்துக்குள்ளாகியிருந்தார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர் காடினோவைச் சேர்ந்த 18 வயது இளைஞர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தின் சூழ்நிலைகள் இன்னும் விசாரணையில் உள்ளதாகவும் வேறு எந்த விவரங்களும் வெளியிடப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.