கொரோனாவை தடுக்க ஆரம்பத்திலேயே தவறிய நாடுகள்! குற்றம் சாட்டிய நிபுணர் குழு

corona Accused expert panel Countries that failed early
By Vasanth Jan 20, 2021 05:25 PM GMT
Vasanth

Vasanth

Report

ஆரம்ப கட்டத்திலேயே கொரோனாவை தடுக்க சீனாவும், மற்ற நாடுகளும் தவறி விட்டன. உலக சுகாதார நிறுவனமும் தாமதம் செய்தது என்று நிபுணர் குழு குற்றம் சாட்டியது. கொரோனா பற்றி ஆராய உலக சுகாதார நிறுவனம் ஒரு நிபுணர் குழுவை அமைத்திருந்தது.

லைபீரியா நாட்டின் முன்னாள் அதிபர் எல்லன் ஜான்சன் சர்லீப், நியூசிலாந்து முன்னாள் பிரதமர் ஹெலன் கிளார்க் ஆகியோர் தலைமையில் இக்குழு அமைக்கப்பட்டது. அந்த குழு, நேற்று முன்தினம் தனது அறிக்கையை வெளியிட்டது.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- கொரோனா பரவல் தொடங்கிய ஆரம்ப கட்டத்திலேயே அதை கட்டுப்படுத்த சீனாவும், இதர நாடுகளும் தவறி விட்டன. அடிப்படை பொது சுகாதார நடவடிக்கைகளை அமல்படுத்தாமல் விட்டு விட்டன. குறிப்பாக, கடந்த ஆண்டு ஜனவரி மாதம், சீனாவில் பெரிய அளவில் கொரோனா பரவத் தொடங்கியபோதே சீனா தனது முயற்சிகளை தீவிரப்படுத்தி இருக்க வேண்டும்.

மிகக்குறைவான நாடுகளே தங்களுக்கு கிடைத்த தகவலை பயன்படுத்தி, நடவடிக்கை எடுத்தன. உலக சுகாதார நிறுவனத்தின் அவசர கூட்டம், கடந்த ஆண்டு ஜனவரி 22-ந் தேதி நடந்தது.

ஆனால், சர்வதேச அவசரநிலையை அறிவிக்காமல் தாமதித்தது. ஒரு வாரம் கழித்துத்தான் அறிவித்தது. அதுபோல், கொரோனாவை ‘சர்வதேச பெருந்தொற்று’ என்று மார்ச் 11-ந் தேதிதான் அறிவித்தது. அதற்குள் பல கண்டங்களிலும் கொரோனா பரவி விட்டது.

உலக சுகாதார நிறுவனம், கொஞ்சம் முன்கூட்டியே அறிவித்து இருந்தால், அது கொரோனாவை தடுக்க உதவி இருக்குமா என்ற கேள்வி எழுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US