அமேசான் நிறுவனத்திலும் ஆட் குறைப்பு நடவடிக்கை
உலகின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் 10 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய தயாராகி வருவதாக அமெரிக்காவின் செய்தி ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இது அந்த நிறுவனத்தின் மொத்த பணியாளர்களில் 3 சதவீதம் ஆகும்.
அத்தோடு இதுவரை இல்லாத அளவில் பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
செலவீனங்களை குறைக்க இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்படுவதாக அமேசான் தரப்பில் கூறப்பட்டதாக அந்த செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.
இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டுவிட்டது என அமேசான் தெரிவித்துள்ளது. அமேசான் நிறுவனத்தில் சில பணியிடங்கள் தேவையில்லை என்று வரையறுக்கப்பட்டுள்ளது.
ஆகவே அந்த குறிப்பிட்ட பொறுப்புகளில் வேலை பார்க்கும் ஊழியர்கள் நிறுவனத்துக்குள்ளே வேறு துறைகளுக்கு(காலி இடங்கள் இருப்பின்) விண்ணப்பித்து இடம் மாறிக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.