ஈரான் தடைகள் மீறல் விவகாரத்தில் அதானி நிறுவனத்திற்கு புதிய சிக்கல்
ஈரானில் இருந்து எல்.பி.ஜி (LPG) எரிவாயு ஏற்றுமதி செய்யப்பட்டதன் மூலம், ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை மீறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், அதானி நிறுவனம் அமெரிக்க நிதித்துறையுடன் 275 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இணக்கப்பாட்டை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக, கௌதம் அதானி சம்பந்தப்பட்ட சிவில் மற்றும் குற்றவியல் வழக்குகளைத் தீர்ப்பதற்கோ அல்லது கைவிடுவதற்கோ அமெரிக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடைகள் நடைமுறையில் இருக்கும் நிலையில், அந்த நாட்டுடன் மேற்கொள்ளப்படும் சில வர்த்தக நடவடிக்கைகள் கடுமையான கண்காணிப்பிற்குட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.