ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்; தொடர்ந்து உயரும் பலி எண்ணிக்கை
ஆப்கானிஸ்தானில் நள்ளிரவு 1.59 மணிக்கு 6.3 ரிச்டர் அளவில் மஸார்-இ-ஷெரிஃப் நகரத்துக்கு 28 கி.மீ.க்கு அடியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
மஸார்-இ-ஷெரிஃபில் 5.2 லட்சம் மக்கள் வசித்து வருகிறார்கள். கடுமையான நிலநடுக்கத்தால் வீடுகள் இடிந்து விழுந்தன.

கடும் சேதம்
கடுமையான அதிர்வால் மக்களில் வீட்டில் இருந்து வெளியே ஓடிவந்தனர். இரவு நேரம் என்பதால், சிலரால் வெளியேற முடிவில்லை. இந்த நிலநடுக்கத்தால் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
320 பேர் காயம் அடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தில் ப்ளூ என்ற 15ஆம் நூற்றாண்டின் மசூதி சேதம் அடைந்துள்ளது. நிலநடுக்கத்தால் நாட்டின் பெரும்பாலான பகுதியில் மின்தடை ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஒகஸ்ட் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு கடும் சேதம் ஏற்படுவதால் தலிபான் அரசு கடும் சவால்களை எதிர்கொண்டு வருகிறது.