மீண்டும் உச்சத்திற்கு சென்ற தங்கம் விலை!
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.44 உயர்ந்து ரூ.4,792க்கு விற்பனையாகிறது. அதன்படி, ஒரு சவரன் தங்கத்திற்கு ரூ.352 விலை உயர்ந்து, ரூ.38,336 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கொடிய கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, கடந்த ஆண்டு ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்த போது, தங்கத்தின் விலை அதிரடியாக அதிகரித்து வந்தது. சர்வதேச சந்தையில், தங்கத்தின் மீதான முதலீடுக்கு அதிக வரவேற்பு இருந்ததே இதற்கு முக்கிய காரணம் என கூறப்பட்டது.
எனினும் , கடந்த ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை தங்கம் விலை கணிசமாக குறைந்து இருந்தது. ரூ.43 ஆயிரத்துக்கு மேல் விற்பனை செய்யப்பட்ட ஆபரணத்தங்கத்தின் விலை கணிசமாக சரிந்து ரூ.37, 000-க்கு விற்பனை செய்யப்பட்டது.
அதன் பின்னர் பெரிய அளவில் மாற்றம் இல்லை என்றாலும், அவ்வப்போது மாறிமாறி ஏற்றம், இறக்கத்தை சந்தித்து வந்தது. இந்நிலையில், இன்று சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.44 உயர்ந்து, ரூ.4,792 -க்கு விற்பனையானது. ஒரு சவரனுக்கு ரூ.352 உயர்ந்து ரூ.38,336க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.1.70 உயர்ந்து, ரூ.73.70 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.