ஏயார் இந்தியா விமானப் பயணம் திடீர் ரத்து ; 200 பயணிகள் பாதிப்பு
டெல்லி விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் நோக்கிப் பயணிக்கவிருந்த ஏயார் இந்தியா விமானத்தில் கடைசி நேரத்தில் பழுது கண்டறியப்பட்டதால் விமானப் பயணம் ரத்து செய்யப்பட்டது.
சிங்கப்பூருக்கு நேற்று மாலை 200 பயணிகளுடன் பயணிப்பதற்காகத் தயாராக இருந்த விமானத்தில் திடீரென தொழிநுட்ப கோளாறு கண்டறியப்பட்டது.
விமானத்தின் மின் விநியோகம் தடைப்பட்டதால் பயணிகள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி இருந்தனர்.
சுமார் 2 மணி நேரம் முயற்சித்தும் விமானத்தில் ஏற்பட்ட மின் விநியோகத் தடையைச் சரி செய்ய முடியாததால் பயணத்தை ரத்து செய்யத் தீர்மானித்து, 200 பயணிகளும் இறக்கி விடப்பட்டனர்.
எவ்வாறாயினும், பயணிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்படும் என ஏயார் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.