அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம் ; தெய்வாதீனமாக உயிர் தப்பிய 160 பயணிகள்
இந்தியா கேரளாவுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தை அவசரமாக கொச்சி விமான நிலையத்தில் தரையிறங்கியது தகவல் வெளியாகியுள்ளது.
கேரளாவுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், ஜெட்டா விமான நிலையத்திலிருந்து கோழிக்கோடுக்கு வந்தபோது, இன்று காலை தரையிறங்கும் கியரில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டது.

விமானி இந்த துரிதக் கோளாற்றை கண்டறிந்து விமான நிலைய ஆணையத்துக்கு தகவல் அளித்தார்.
இதன் பின்னர் விமானத்தை அவசரமாக கொச்சி விமான நிலையத்தில் தரையிறக்க அறிவுறுத்தப்பட்டு, தீயணைப்பு படையினர் மற்றும் விமான நிலைய பாதுகாப்பு குழுவினர் தயார் நிலையில் நிறுத்தப்பட்டனர்.
காலை 9.07 மணிக்கு விமானம் பாதுகாப்பாக தரையிறங்கி, அதில் இருந்த 160 பயணிகளும் பத்திரமாக வெளியே கொண்டு வந்தனர்.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தகவல்படி, ஜெட்டா விமான நிலைய ஓடுபாதையில் இருந்த ஒரு வெளிநாட்டு பொருள் காரணமாக விமான டயரில் சேதம் ஏற்பட்டது, இதனால் விமானம் அவசரமாக தரையிறங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.