தாறுமாறாக உயர்ந்த எலான் மஸ்க் சொத்து மதிப்பு
உலகின் பெரும் பணக்காரரும், பிரபல தொழில் அதிபருமானவர் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு நேற்றைய நிலவரப்படி 638 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆக் உள்ளதாக கூறப்படுகின்றது.
இந்தநிலையில் எலான் மஸ்க் உலகில் 600 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்பை தாண்டிய முதல் தனிநபராக நேற்று உருவெடுத்தார்.

600 பில்லியன் சொத்து மதிப்பை தாண்டிய முதல் தனிநபர்
இவர் ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா, எக்ஸ் வலைத்தளம், எக்ஸ் ஏ.ஐ., ஸ்டாா்லிங்க் உள்ளிட்ட பிரபல உலக நிறுவனங்களின் நிறுவனராகவும், தலைவராகவும் இருந்து வருகிறார்.
அமெரிக்க ஜனாதிபதி டிரம்புடன் நெருங்கி பழகி வரும் எலான் மஸ்க் அவருக்கான சிறப்பு ஆலோசகரும், டாட்ஜ் என்ற திறன் மதிப்பீட்டுத்துறையின் முன்னாள் தலைவராகவும் செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில் நேற்றைய நிலவரப்படி அவருடைய சொத்து மதிப்பு 638 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அமெரிக்க பங்குச்சந்தையில் அதிக மதிப்புடன் பட்டியலிடப்பட்டு உள்ளதால் எலான் மஸ்க் சொத்து மதிப்பு தாறுமாறாக உயர்ந்தது.