மனித உயிருக்கு அச்சுறுத்தலான பறவைக் காய்ச்சல் ; விஞ்ஞானிகள் கடும் எச்சரிக்கை
பறவைக் காய்ச்சல் எவ்வாறு மனிதர்களுக்குப் பரவக்கூடும் என இந்திய விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். எதிர்காலத்தில் இந்த பறவைக் காய்ச்சல் பறவைகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவி, உலகளாவிய சுகாதார நெருக்கடியைத் தூண்டக்கூடும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர்.
ஏவியன் இன்ஃப்ளூவன்சா (Avian flu) எனப்படும் ஒரு வகை காய்ச்சல், தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா முழுவதும் கால் ஊன்றியுள்ளது.
1990 களின் பிற்பகுதியில் சீனாவில் தோன்றியதிலிருந்து இது அவ்வப்போது மனிதர்களுக்கும் தொற்று பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
2003 முதல் 2025 ஆகஸ்ட் வரை, உலக சுகாதார நிறுவனம் 25 நாடுகளில் 990 மனித எச்5என்1 பாதிப்புகளைப் பதிவு செய்துள்ளது.

மனிதர்களிடம் காணப்படும் அறிகுறிகள் கடுமையான காய்ச்சலைப் போன்றே இருக்கும் அதிக காய்ச்சல், இருமல், தொண்டை புண், தசை வலி மற்றும் சில நேரங்களில் கண் அழற்சி ஆகியவை ஏற்படும்.
சிலருக்கு எந்த அறிகுறிகளும் தெரிவதில்லை. மனிதர்களுக்கு ஏற்படும் ஆபத்து தற்போது குறைவாகவே உள்ளது, ஆனால் இந்த வைரஸ் எளிதாகப் பரவக்கூடிய வகையில் ஏதேனும் மாற்றமடைகிறதா என்பதை நிபுணர்கள் கண்காணித்து வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் இந்திய ஆராய்ச்சியாளர்கள் இருவர் புதிய ஆய்வினை முன்னெடுத்தனர்.
எச்5என்1 மனிதர்களிடையே பரவினால் அது எப்படியிருக்கும் என்பதையும், ஆரம்பக் கட்டத்திலேயே அதைத் தடுக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதையும் அவர்கள் கண்டறிந்துள்ளனர்.
மனிதர்களுக்குப் பரவும் அச்சுறுத்தல் உண்மையானது, ஆனால் சிறந்த கண்காணிப்பு மற்றும் விரைவான பொதுச் சுகாதார நடவடிக்கைகள் மூலம் இதைத் தடுக்க முடியும்," என குறிப்பிடப்படுகிறது.