யூத சமூகத்திற்கு எதிராக வெறுப்பைத் தூண்டிய நபர் கைது
யூத சமூக உறுப்பினர்களுக்கு எதிராக வெறுப்பை ஊக்குவிக்கும் துண்டுப் பிரசுரங்களை பரப்பியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், டொராண்டோவைச் சேர்ந்த 62 வயது ஆண் ஒருவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ரொராண்டோ பொலிஸார் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
ஜனவரி 2ம் திகதி நகரின் மேற்கு பகுதியிலுள்ள ப்ளோர் ஸ்ட்ரீட் மற்றும் லாண்ட்ஸ்டோவன் அவன்யு சந்திப்புக்கு அருகே, வெறுப்பு குற்றம் நடந்ததாக புகார் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து, பொலிஸ் பிரிவு விசாரணையை தொடங்கியது.
விசாரணையின் பின்னர், வெறுப்பை சுய விருப்பத்துடன் ஊக்குவித்தல் என்ற குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வகை குற்றங்கள்—வெறுப்பு பிரசாரம் அல்லது இன அழிப்பு ஆதரவு போன்றவை—சட்டப்படி பதிவு செய்ய மாநிலத்தின் தலைமை சட்ட ஆலோசகரின் அனுமதி அவசியமாகும்.
அதனால் பல சந்தர்ப்பங்களில் குற்றச்சாட்டுகள் தாமதமாகப் பதிவு செய்யப்படுவதாகவும் பொலிஸார் விளக்கமளித்துள்ளனர்.
இதன் அடிப்படையில், ஒலிவர் கவுடோ (Oliver Couto) என்ற 62 வயது நபர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர் பெப்ரவரி 3ம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாக உள்ளார்.