கனடாவில் பண்டிகைக் காலத்தில் எகிறும் பொருட்களின் விலை
கனடாவில் பண்டிகைக் காலத்தில் பொருட்களின் விலைகள் உயர்வடைந்து செலவ்தாகத் தெரிவிக்கப்படுகின்றது.
உணவு பண்டிகைக் கால உணவுப் பொருட்களின்விலைகள் கடந்த ஆண்டைவிட கணிசமாக உயர்ந்துள்ளது என பலரும் தெரிவிக்கின்றனர்.
2024 டிசம்பர் நடுப்பகுதியிலும் 2025 டிசம்பர் நடுப்பகுதியிலும், வழக்கமான கிறிஸ்துமஸ் உணவுப் பொருட்களின் விலைகள் ஆய்வு செய்யப்பட்டன.

கடை விலைகள் மற்றும் பழைய ஆன்லைன் விளம்பரத் தாள்கள் (flyers) அடிப்படையில் செய்யப்பட்ட இந்த ஒப்பீடு, குடும்பங்கள் மொத்தத்தில் அதிகம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக காட்டுகிறது. இதில் மாட்டிறைச்சி விலை உயர்வே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வருடம் மிக அதிக செலவு. விலைகள் உண்மையிலேயே உயர்ந்துவிட்டதாக மக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
விளம்பரத் தாள்களை கவனமாக ஒப்பீடு செய்தல், சலுகைகளைப் பயன்படுத்துதல், மற்றும் மாட்டிறைச்சிக்கு பதிலாக மாற்றுப் புரதங்களைத் தேர்வு செய்தல் — இவை இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையில் செலவைக் குறைக்க உதவும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.