பிரித்தானியாவில் 9 வயது சிறுமியை கொன்ற பதின்ம வயது சிறுவன்
பிரித்தானியாவில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட சம்பவத்தில் பதின்ம வயது சிறுவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரித்தானியாவின் சோமர்செட் பகுதியில் வெஸ்டன் சூப்பர் மேர் நகரில் உள்ள லைம் குளோஸ்(Lime close) குடியிருப்பு பகுதிக்கு திங்கட்கிழமை மாலை 6.09 மணிக்கு அவசர அழைப்பு பிரிவினர் மற்றும் காவல்துறையினர் அழைக்கப்பட்டனர்.

உயிருக்கு போராடி கொண்டிருந்த 9 வயது சிறுமி
அங்கு உயிருக்கு போராடி கொண்டிருந்த 9 வயது சிறுமியை காப்பாற்ற முயற்சி செய்தனர், இருப்பினும் அந்த முயற்சிகள் தோல்வி அடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே சிறுமி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தின் தொடர்ச்சியாக, இதற்கு தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பதின்ம வயது சிறுவனை பொலிஸார் கொலை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
சம்பவம் நடந்த அடுத்த 10 வது நிமிடத்திலேயே அதாவது மாலை 6.19-க்கு வோர்ல்(worle) கிராமத்தில் சந்தேகத்திற்குரிய சிறுவனை மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர்.
சிறுவன் தற்போது பொலிஸார் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். மேலும் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கான சரியான காரணத்தை விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.