கல்கரி பொலிஸார் மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை
கல்கரி பொலிஸார், பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அல்பர்ட்டா மாகாண அரசாங்கம் வழங்கும் உதவு தொகை கொடுப்பனவை மையமாக கொண்டு மோசடிகள் இடம்பெறுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் கொடுப்பனவை பெற்றுக் கொள்ள தங்களை பதிவு செய்து கொள்ளுமாறு கோரும் வகையில் குறுஞ்செய்திகள் அனுப்பி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனிப்பட்ட விபரங்களை உள்ளீடு செய்யுமாறு கோரி குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்பட்ட போதிலும் அவ்வாறான குறுஞ்செய்தி எதனையும் அரசாங்கம் அனுப்பி வைக்கவில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.
தனிப்பட்ட விபரங்கள் மற்றும் வங்கி விபரங்கள் கோரி அனுப்பி வைக்கப்படும் குறுஞ்செய்திகளை திறக்க வேண்டாம் எனவும் தகவல்களை வழங்க வேண்டாம் எனவும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
வருமானம் குறைந்த மக்களுக்கு மாகாண அரசாங்கம் 600 டொலர் கொடுப்பனவு ஒன்றை வழங்கி வருகின்றது.
எனினும், இந்த கொடுப்பனவிற்காக குறுஞ்செய்தி ஊடாக தகவல்கள் திரட்டப்படவில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.